மலேசிய தொழிலதிபரிடம் ரூ.10.61 கோடி மோசடி; சென்னையை சேர்ந்த தாய், மகள் கைது
மலேசிய தொழிலதிபரிடம் மோசடி செய்த புகாரில், சென்னையை சேர்ந்த தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.;
சென்னை,
மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 12 ஆயிரம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி, போலி ஆவணம் மூலம் சென்னையை சேர்ந்த நபர்கள் தன்னிடம் ரூ.10.61 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தமிழரசி, அவரது தாயார் கோவிந்தம்மாள் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடம் இருந்து இருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளின் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.