பொங்கல் பண்டிகை: திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.;

Update:2025-01-12 20:51 IST

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் வசதிக்காக போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக திருவனந்தபுரம்-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி, திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண்.06058) திருவனந்தபுரத்திலிருந்து வருகிற 15-ந் தேதி அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னை-திருவனந்தபுரம் (06059) சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

திருவனந்தபுரம்-சென்னை சிறப்பு ரெயில் பெரம்பூாில் நின்று செல்லும். திருவனந்தபுரம்-சென்னை சிறப்பு ரெயில் திருப்பூருக்கு மதியம் 2.23 மணிக்கு வந்து 2.25 மணிக்கு புறப்படும். சென்னை-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் திருப்பூருக்கு காலை 8.08 மணிக்கு வந்து 8.10 மணிக்கு புறப்படும்.

எர்ணாகுளம்-சென்னை சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி எர்ணாகுளத்திலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னை-எர்ணாகுளம்(06047) சிறப்பு ரெயில் வருகிற 17-ந் தேதி சென்னையிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரெயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

எர்ணாகுளம்-சென்னை (06046) சிறப்பு ரெயில் பெரம்பூரில் நின்று செல்லும். எர்ணாகுளம்-சென்னை சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி திருப்பூருக்கு 11.53 மணிக்கு வந்து 11.55 மணிக்கு புறப்படும். சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் வருகிற 17-ந்தேதி திருப்பூருக்கு மாலை 5.28 மணிக்கு வந்து 5.30 மணிக்கு புறப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்