நாங்கள் பலமுடன் இருப்பதால் மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன - அமைச்சர் துரைமுருகன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பலமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.;

Update:2025-01-12 19:55 IST

வேலூர்,

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பலமாக உள்ளது. நாங்கள் பலமுடன் இருப்பதால் மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. சட்டப்பேரவையில் மரபை மாற்ற சொன்னது கவர்னர்தான். அவர்தான் தவறு செய்துள்ளார். கவர்னர் கோருவதால் சட்டமன்ற மரபை மாற்ற முடியாது. முதல்வருக்கு இவ்வளவு ஆணவல் நல்லதல்ல என கூறியவருக்கு கவர்னர் என்ற திமிர் இருக்கிறது. " என கூறினார்.

முன்னதாக, சட்டசபையில் தேசிய கீதம் முதலில் பாடப்படாதது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து கவர்னர் இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்