பெண்ணை தாக்கி 100 மீட்டர் இழுத்துச் சென்ற புலி... மக்கள் அதிர்ச்சி
புலியானது பெண்ணை தாக்கி சுமார் 100 மீட்டர் இழுத்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

தானே,
மராட்டிய மாநிலம் கோண்டியா மாவட்டம் கோத்தங்காவ் வனப்பகுதியில் உள்ள ஷிவ்ராம்தோலாவைச் சேர்ந்தவர் அனுசயா தனு கோல்ஹே (வயது 50). இவர் இன்று காலை 7 மணியளவில் பூக்களை சேகரிக்க சென்றார். அப்போது புதர்களுக்குள் மறைந்திருந்த புலியானது திடீரென பெண் மீது பாய்ந்து தாக்கியது.
இந்த தாக்குதலில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை தாக்கிய புலி சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு பெண்ணின் உடலை இழுத்துச் சென்றது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு உடலின் அருகே அமர்ந்திருந்த புலியை வனத்துறையினர் முதலில் அங்கிருந்து விரட்டினர். பின்னர் பெண்ணின் உடலை மீட்ட வனத்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் வனத்துறையினர் புலியை தீவிராமாக தேடி வருகின்றனர். புலியானது பெண்ணை தாக்கி சுமார் 100 மீட்டர் இழுத்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.