ம.பி.: கல்லூரி மாணவியை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுவன் உள்பட 4 பேர் கைது
மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவியை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.;
போபால்,
மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் கல்லூரியில் படித்து வரும் 20 வயது மாணவி ஒருவர் நேற்று படித்து விட்டு, வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவர், மாலை 6 மணியளவில் ஆட்டோவை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, ஹேம்ராஜ் சிங் (வயது 23) என்ற வாலிபர், அவருடைய 3 கூட்டாளிகளுடன் சேர்ந்த அந்ம த மாணவியை மரங்களுக்கு பின்னால் இழுத்து சென்றனர். இதன்பின்னர், அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுபற்றி ராஜேந்திரகிராம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி விரேந்திர குமார் கூறும்போது, விசாரணையின் தொடர்ச்சியாக ஹேம்ராஜ், நேபாள் சிங் (வயது 20) மற்றும் ஜிதேந்திரா சிங் (வயது 25) ஆகியோரை கைது செய்தோம். சம்பவத்துடன் தொடர்புடைய 4-வது குற்றவாளியான சிறுவன் ஒருவனும் பிடிபட்டு உள்ளான் என்றார்.
அவர்களுக்கு எதிராக புதிய குற்றவியல் சட்டத்தின் கூட்டு பாலியல் வன்கொடுமை, கடத்தல் மற்றும் குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.