பஞ்சாப்: எல்லை தாண்டி போதைப்பொருள் கடத்தல் - பெண் உட்பட 4 பேர் கைது
பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதிகளுக்குள் போதைப்பொருளை கடத்துவதற்கான முயற்சிகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.;
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதிகளுக்குள் போதைப்பொருளை கடத்துவதற்கான முயற்சிகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதனை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த பெண் உட்பட 4 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து 5.2 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவரிடவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருளை கடத்தியவர்கள் அமிர்தரசின் இப்பான் கலன் கிராமத்தை சேர்ந்த மந்தீப் கவுர் (27), செஹர்தாவில் உள்ள ஜந்தா காலனியை சேர்ந்த ஆலம் அரோரா (23), மற்றும் டர்ன் தரனை சேர்ந்த 18 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டனர்.
இந்த போதைப்பொருள் கும்பலின் தலைவி பிடிபட்ட 4 பேரில் ஒருவரான அந்த பெண்தான் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார். இவர்களை கைது செய்த போலீசார் இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.