அசாம்: வினாத்தாள் கசிவு காரணமாக பொதுத்தேர்வு ரத்து
அசாமில் வினாத்தாள் கசிந்ததால் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.;

திஸ்பூர்,
அசாம் மாநிலத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 6ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது.
இந்த நிலையில் தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிந்தன. இதனால் அசாமில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 24-29 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வினாத்தாள் கசிவு குறித்து புகார்கள் எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.