அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பா.ஜ.க. - சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி

அருணாசலபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது. சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அபார வெற்றிபெற்றது.

Update: 2024-06-02 01:22 GMT

இட்டாநகர்,

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

Live Updates
2024-06-02 04:23 GMT

அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பா.ஜ.க.

அருணாசலபிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பா.ஜ.க. 60 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை களமிறக்கியது. தேசிய மக்கள் கட்சி உள்பட பிற கட்சிகளும் களமிறங்கின.

அதேவேளை, களத்தில் போட்டி வேட்பாளர்கள் இல்லாததால் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து எஞ்சிய 50 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் ஆளும் பா.ஜ.க. 46 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் அருணாசலபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேசிய மக்கள் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. பிற கட்சிகள் 8 தொகுதிகளை கைப்பற்றின. காங்கிரஸ் ஒரு தொகுதியை கைப்பற்றியது.

அருணாசலபிரதேசத்தில் 46 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. முதல்-மந்திரியாக பெமா காண்டு மீண்டும் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024-06-02 04:08 GMT

சிக்கிமில் அபார வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்த சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, பா.ஜ.க., சிக்கிம் ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பெரும்பான்மைக்கு 17 தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இறுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி 1 தொகுதியை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் 31 தொகுதிகளில் அபார வெற்றிபெற்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சிக்கிமில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஆட்சியை தக்கவைத்ததன் மூலம் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றிபெற்றதை அக்கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

2024-06-02 03:01 GMT

8.30 மணி நிலவரம்

சிக்கிமில் ஆட்சியை தக்கவைக்கும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

சிக்கிம்: மொத்த தொகுதிகள் 32 - பெரும்பான்மை 17

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 31 (முன்னிலை)

சிக்கிம் ஜனநாயக முன்னணி - 1

பா.ஜ.க. - 0

காங்கிரஸ் - 0

மற்றவை - 0

பெரும்பான்மைக்கு 17 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியை தக்கவைக்கிறது.

அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பா.ஜ.க.

அருணாசலபிரதேசம்: மொத்த தொகுதிகள் 60 - பெரும்பான்மை 31 

பா.ஜ.க - 35 (முன்னிலை)

தேசிய மக்கள் கட்சி - 6

காங்கிரஸ் - 1

மற்றவை - 7

பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ஆளும் பா.ஜ.க. 35 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அருணாசலபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது. 

2024-06-02 02:35 GMT

8 மணி நிலவரம்

சிக்கிம்: மொத்த தொகுதிகள் 32 - பெரும்பான்மை 17

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 27 (முன்னிலை)

சிக்கிம் ஜனநாயக முன்னணி - 2

பா.ஜ.க. - 0

காங்கிரஸ் - 0

மற்றவை - 0

பெரும்பான்மைக்கு 17 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சி சிக்கிமில் மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருணாசலபிரதேசம்: மொத்த தொகுதிகள் 60 - பெரும்பான்மை 31

பா.ஜ.க - 32 (முன்னிலை)

தேசிய மக்கள் கட்சி - 2

காங்கிரஸ் - 1

மற்றவை - 4

பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ஆளும் பா.ஜ.க. 32 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அருணாசலபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024-06-02 02:04 GMT

7.30 மணி நிலவரம்

சிக்கிம்: மொத்த தொகுதிகள் 32 - பெரும்பான்மை 17

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 13 (முன்னிலை)

சிக்கிம் ஜனநாயக முன்னணி - 1

பா.ஜ.க. - 1

காங்கிரஸ் - 0

மற்றவை - 0

அருணாசலபிரதேசம்: மொத்த தொகுதிகள் 60 - பெரும்பான்மை 31

பா.ஜ.க - 21 (முன்னிலை)

தேசிய மக்கள் கட்சி - 3

காங்கிரஸ் - 0

மற்றவை - 1

2024-06-02 01:29 GMT

சிக்கிம்; தொகுதிகள் 32 - பெரும்பான்மை 17

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 4 (முன்னிலை)

சிக்கிம் ஜனநாயக முன்னணி - 1

பா.ஜ.க. - 1

காங்கிரஸ் - 0

மற்றவை - 0

2024-06-02 01:25 GMT

அருணாசலபிரதேசம்; தொகுதிகள் 60 - பெரும்பான்மை 31

பா.ஜ.க - 17 (முன்னிலை)

தேசிய மக்கள் கட்சி - 1

காங்கிரஸ் - 0

தேசியவாத காங்கிரஸ் - 0

மற்றவை - 0

2024-06-02 01:22 GMT

அருணாசலபிரதேசம்

60 சட்டசபை தொகுதிகளை கொண்ட அருணாசலபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பா.ஜ.க., காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜ.க. வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

இதனால், எஞ்சிய 50 தொகுதிகள் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிம்

சிக்கிமில் 32 சட்ட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சி செய்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி உள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், பிற கட்சிகளும் களத்தில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்