அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பா.ஜ.க. ... ... அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பா.ஜ.க. - சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி

அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பா.ஜ.க.

அருணாசலபிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பா.ஜ.க. 60 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை களமிறக்கியது. தேசிய மக்கள் கட்சி உள்பட பிற கட்சிகளும் களமிறங்கின.

அதேவேளை, களத்தில் போட்டி வேட்பாளர்கள் இல்லாததால் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து எஞ்சிய 50 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் ஆளும் பா.ஜ.க. 46 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் அருணாசலபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேசிய மக்கள் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. பிற கட்சிகள் 8 தொகுதிகளை கைப்பற்றின. காங்கிரஸ் ஒரு தொகுதியை கைப்பற்றியது.

அருணாசலபிரதேசத்தில் 46 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. முதல்-மந்திரியாக பெமா காண்டு மீண்டும் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-06-02 04:23 GMT

Linked news