கணவர்களை தவிக்க விட்டு கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடித்த 11 பெண்கள்

உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற வினோத சம்பவங்கள் நடப்பது முதல் முறையல்ல என கூறப்படுகிறது.;

Update:2024-07-10 08:51 IST

லக்னோ,

சொந்த வீடு இன்றி வாழும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்காக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன்மூலமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள்.

சிலர் இந்த திட்டத்தில் மோசடி செய்வதாக கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக தலா ரூ.40 ஆயிரம் பெற்ற 11 பெண்கள் தங்களது கணவர்களை தவிக்க விட்டுவிட்டு கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்.

மகாராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவர், ரூ.40 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்ட தனது மனைவி சூனியா மாயமாகி விட்டதாக போலீசில் புகார் தெரிவித்தார். அப்போதுதான் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதேபோல் மற்ற பெண்களின் கணவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்குமுன்பு இதே போன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்திலும் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற வினோத சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் பெண்கள் தங்கள் காதலர்களுடன் ஓடிப்போன சம்பவங்கள் பல உள்ளன. கடந்த ஆண்டும், பிரதமரின் வீடு கட்டும் உதவிதிட்டத்தின் ஒரு பகுதியாக, 50,000 ரூபாய் பெற்ற பிறகு, நான்கு திருமணமான பெண்கள் தங்கள் காதலர்களுடன் ஓட்டம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்