டெல்லி விமான நிலையத்தில் ரூ.1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல் : தம்பதி கைது

டெல்லி விமான நிலையத்தில் ரூ.1.41 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-01-13 17:43 IST

டெல்லி

டெல்லி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று பஹ்ரைனில் இருந்து விமானமானது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அதில் ஒரு திருமண தம்பதியினர் கையில் 2 டிராலி பைகளுடன் வந்தனர். சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறையினர் அந்த பைகளில் சோதனை நடத்தினர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதில் மொத்தம் 1.9 கிலோ (ரூ.1.41 கோடி மதிப்பிலான) தங்கத்தை அதிகாரிகள் மீட்டனர். மேலும் வெள்ளி நிற உலோக கம்பிகளின் வடிவில் தங்கத்தை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கத்தை கடத்திய கணவன் மற்றும் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்