காஷ்மீரில் 80 சதவீதம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள்; ராணுவ தலைமை தளபதி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெறும் பெருமளவிலான வன்முறை சம்பவங்களுக்கு காரணம் பாகிஸ்தான் என ராணுவ தலைமை தளபதி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவிவேதி, ஆண்டுதோறும் ராணுவ தினத்தில் நடத்தப்படும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று பேசினார்.
அப்போது அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் செயல்பட்டு வரும் 80 சதவீதம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள் என கூறினார். பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் பெருமளவிலான வன்முறை சம்பவங்களுக்கு காரணம் பாகிஸ்தான் என்ற குற்றச்சாட்டையும் கூறியுள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாடாளுமன்ற தேர்தல்கள் மற்றும் சட்டசபை தேர்தல்களில் 60 சதவீத வாக்கு பதிவு நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு அர்த்தம் என்னவெனில், உள்ளூர் மக்கள் அமைதியுடன் செல்கின்றனர் என்பதே. காஷ்மீர் மக்கள் வன்முறையை விட்டு விலகியிருக்கின்றனர். ஆனால், வன்முறையானது நம்முடைய மேற்கத்திய பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தானால் நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.