வானிலை முன்னறிவிப்பின் துல்லிய தன்மை 50 சதவீதம் அதிகரித்து உள்ளது - மத்திய மந்திரி பேச்சு

வானிலை நாளை என்ன செய்யும்? என கணிக்கும் அளவுக்கு வானிலை முன்னறிவிப்பின் துல்லிய தன்மை அதிகரித்து உள்ளது என மத்திய மந்திரி பேசியுள்ளார்.;

Update:2025-01-14 14:04 IST

புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதில், மத்திய புவி அறிவியல் துறையின் இணை மந்திரி ஜிதேந்திரா சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அவர் பேசும்போது, வானிலை முன்னறிவிப்பின் துல்லிய தன்மை கடந்த 10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்து உள்ளது என கூறியுள்ளார்.

2014-ம் ஆண்டுக்கு பின்னர் பிரதமர் மோடி தலைமையின் கீழ், ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, நம்முடைய நிறுவுதல் பணி இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் முடிந்து விடவில்லை. நாம் விண்வெளி, நிலம் மற்றும் கடலிலும் உபகரணங்களை நிறுவியுள்ளோம்.

2014-ம் ஆண்டுக்கு முன்னர் வரை 15 ரேடார் நெட்வொர்க்குகளே இருந்தன. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 39 ஆக இரட்டிப்படைந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.

வானிலை சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக உள்ளது. இதற்காக உலக தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் நோக்கில் மிஷன் மவுசம் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால், வானிலை எதிர்கொள்ள எப்போதும் இந்தியா தயார் என்ற நிலை உருவாக்கப்படும்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மந்திரம் ஆனது, இதுவரை இருந்த வந்த நாளை என்ன வானிலையாக இருக்கும்? என்றில்லாமல், வானிலை நாளை என்ன செய்யும்? என்ற அடிப்படையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், வானிலையின் தாக்கம் நாளைக்கு எந்தளவுக்கு இருக்கும்? என கணிக்கும் வகையில், வானிலை முன்னறிவிப்பில் துல்லிய தன்மை அதிகரித்து உள்ளது என தெரிய வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்