இசையமைப்பாளர் தமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது

மலையாள இசையமைப்பாளர் கைதப்பிரம் தமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.;

Update:2025-01-14 15:31 IST

சபரிமலை,

கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சார்த்தப்படும்போது ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்படும். அது மிகவும் பிரதிபெற்ற நிகழ்ச்சியாக நடத்தப்படும். அதை சிறப்பிக்கும் விதமாக 2012 ம் ஆண்டு முதல் 'ஹரிவராசனம்' என்ற பெயரில் விருதினை கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து வழங்கி வருகிறது.

இசையின் மூலம் சபரிமலை சமய சார்பின்மை, சமத்துவம், உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவற்றை பரப்பும் பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

இந்நிலையில் பிரபல மலையாள பாடலாசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான கைதப்பிரம் தாமோதரன் நம்பூதிரிக்கு 2025-ம் ஆண்டுக்கான கேரள அரசின் "சபரிமலை ஹரிவராசனம்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, ஏராளமான அய்யப்ப பக்தி பாடல்களையும் கைதப்பிரம் தாமோதரன் நம்பூதிரி எழுதி இசையமைத்துள்ளார். விருது வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் கலந்துகொண்டு விருதினை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்