டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்
டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி. நட்டாவும் கலந்து கொண்டார்.;
புதுடெல்லி,
நாடு முழுவதும் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை வெவ்வேறு பெயர்களில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, டெல்லியில் மத்திய மந்திரி ஜி. கிஷன் ரெட்டியின் வீட்டில் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார். அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று அவருடைய வாழ்த்துகளையும் மக்களுக்கு தெரிவித்து கொண்டார்.
இந்த விழாவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் நடிகர் சிரஞ்சீவியும் கலந்து கொண்டனர். இதேபோன்று, மத்திய மந்திரி கிஷன் ரெட்டியின் வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில், மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி. நட்டாவும் கலந்து கொண்டார்.