குன்றத்தூர் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம் - மலை மீது வாகனங்கள் செல்ல தற்காலிக தடை

குன்றத்தூரில் மலை மீது வாகனங்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-01-01 10:28 GMT

சென்னை,

ஆங்கில் புத்தாண்டை முன்னிட்டு இன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணி முதலே பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில், பொதுதரிசனம் மற்றும் கட்டண தரிசனம் உள்ளிட்ட வரிசைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் குன்றத்தூரில் மலை மீது வாகனங்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலின் கீழ்ப்பகுதியிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பக்தர்கள் படிக்கட்டு வழியாக ஏறிச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை நேரத்தில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்