இந்த வார விசேஷங்கள்: 1-1-2025 முதல் 6-1-2025 வரை

திருத்தணியில் நாளை முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தனம்.;

Update: 2025-01-01 05:36 GMT

1-ந் தேதி (புதன்)

* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜர் தலங்களில் பகற்பத்து விழா.

* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.

* மேல்நோக்கு நாள்.

2-ந் தேதி (வியாழன்)

* திருவோண விரதம்.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் புறப்பாடு.

* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தனம்.

* மதுரை கூடலழகர், திருமோகூர் காளமேகப் பெருமாள் தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.

* மேல்நோக்கு நாள்.

3-ந் தேதி (வெள்ளி)

* சதுர்த்தி விரதம்.

* ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் விழா ஆரம்பம்.

* மிலட்டூர் விநாயகர் பவனி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்டராமர் திருக்கோலம்.

* மேல்நோக்கு நாள்.

4-ந் தேதி (சனி)

* சிதம்பரம் நடராஜர், திருநெல்வேலி நெல்லையப்பர், குற்றாலம் குற்றாலநாதர் தலங்களில் விழா தொடக்கம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், ஏணிக்கண்ணன் திருக்கோலம்.

* திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் சூரியபிரபை வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

5-ந் தேதி (ஞாயிறு)

* சஷ்டி விரதம்.

* சிதம்பரம் நடராஜர் பவனி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பரமபதநாதர் காட்சி.

* ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர், முதல்வர் திருக்கோலம்.

* கீழ்நோக்கு நாள்.

6-ந் தேதி (திங்கள்)

* திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் திரிபுர சம்கார லீலை.

* திருநெல்வேலி நெல்லையப்பர், சிதம்பரம் நடராஜர் பவனி.

* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம்.

* மேல்நோக்கு நாள்.

Tags:    

மேலும் செய்திகள்