வடபழனி முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

வடபழனி முருகன் கோவிலில் இன்று நள்ளிரவு 12 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.;

Update: 2025-01-01 07:11 GMT

சென்னை,

ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புத்தாண்டையொட்டி கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் புத்தாண்டையொட்டி வடபழனி முருகன் கோவிலில் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு பின்னர் மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும்.

இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் நண்பகல் 12 மணிக்கு வடபழனி முருகன் கோவில் நடை அடைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலில் இன்று நள்ளிரவு 12 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்