எல்லாமே ஐந்து.. விருத்தகிரீஸ்வரர் கோவில் சிறப்புகள்
வெளிப் பிரகாரத்தில் நந்தி மண்டபக் கொடி மரம், வன்னியடிப் பிராகாரத்தில் பிரதான கொடிமரம், தெற்கு, மேற்கு மற்றும் வடக்குச் சுற்றுகளில் உள்ள 3 கொடிமரங்கள் என ஐந்து கொடிமரங்கள் உள்ளன.;

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் எந்த கோவில்களிலும் இல்லாத வகையில் பல்வேறு சிறப்புகள் உள்ளன. பிரகாரங்கள், கோபுரங்கள், கொடிமரங்கள், தீர்த்தங்கள், தேர்கள், விநாயகர்கள், பூஜை வகைகள் என பல்வேறு அம்சங்கள் ஐந்து என்ற எண்ணிக்கையில் அமைந்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.
பிரகாரங்கள்: கோவில் பிரகாரம் 3, தேரோடும் வீதி மற்றும் பஞ்சவர்ணப் பிரகாரம் (மானசிக ஆன்மப் பிரகாரம்).
கோபுரங்கள்: 4 கோபுரங்கள் மற்றும் கண்டராதித்த கோபுரம்.
கொடிமரங்கள்: வெளிப் பிரகாரத்தில் நந்தி மண்டபக் கொடிமரம், வன்னியடிப் பிராகாரத்தில் பிரதான கொடிமரம், தெற்கு, மேற்கு மற்றும் வடக்குச் சுற்றுகளில் உள்ள 3 கொடிமரங்கள்.
தீர்த்தங்கள்: அக்னி, சக்கர, குபேர, மணிமுத்தா நதி மற்றும் நித்யானந்த கூபம் (இறைவனோடு இணையும் ஆனந்த ஆன்ம அனுபவம்)
விநாயகர்கள்: ஆழத்துப் பிள்ளையார், வல்லப விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், தசபுஜ விநாயகர், முப்பிள்ளையார்.
தேர்கள்: விநாயகர், பழைமலைநாதர், பெரிய நாயகி, சுப்ரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள்.
தேவர்கள் வழிபட்ட தலம்: திருமால், பிரம்மா, இந்திரன், குபேரன் மற்றும் குபேரனின் தங்கை.
ரிஷிகள் வழிபட்ட தலம்: சுக்கிரன், யாக்ஞ வல்கியர், அகத்தியர், அத்திரி மற்றும் காசியப்பர்.
மகான்கள் வழிபட்ட தலம்: விபச்சித்து, ரோமசர், நாதசர்மா, அநவர்த்தனி மற்றும் குமாரசர்மா.
முக்கிய மண்டபங்கள்: தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபச்சித்து மண்டபம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் இசை மண்டபம் (கோவில் முகப்பில் இருக்கும் மண்டபம், அம்மன் சந்நிதி முன் மண்டபம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால் இன்னும் அதிகமாகும்).
பூஜை வகைகள்: திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், சாயரக்சை மற்றும் அர்த்தஜாமம்.
தலத்தின் 5 பெயர்கள்: திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, மதுகிரி.