திட்டமிட்ட செயல்களில், தீவிர முயற்சியால் முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம். தொழில் பரபரப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி இருந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். இல்லத்தில் சுபகாரியம் நடந்தேறும். இந்த வாரம் சனிக்கிழமை, சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.