05.05.2024 முதல் 11.5.2024 வரை
தொழில் சம்பந்தமாக கணவன் மனைவி வேறு வேறு இடம் என்று இருந்த நிலை மாறி ஒன்று சேரும் வாரம் இது. விரும்பிய இடத்திற்கு சிலருக்கு பணியிட மாற்றம் உண்டாகும். காதலர்கள் சந்தித்து தங்கள் உறவை மேம்படுத்திக் கொள்ளும் வாரம். சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான உடல் பாதைகள் ஏற்படக்கூடும். சுய மருத்துவத்தை தாருங்கள் சிறந்த மருத்துவர் பெறுங்கள். வாரத்தின் பிற்பகுதியில் காரிய தடை தாமதம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சிலர் குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று திரும்ப வாய்ப்புகள் உருவாகும் வாரம் இது. பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.