விருச்சகம் - வார பலன்கள்

Update:2023-09-15 01:23 IST

அச்சமில்லாத மனம் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே!

உங்கள் முயற்சிகள் சிலவற்றில் முன்னேற்றமான போக்கு காணப்படும். நண்பர்கள் உதவியுடன் வெற்றிக்காக தீவிரமாக பாடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளில் மிகவும் கவனமுடன் செயல்படுவது அவசியம். புதியவர்களிடம் அலுவலக விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவது பிரச்சினையை ஏற்படுத்தும்.

சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். அவசர வேலைகளால் ஓய்வு நேரத்தை இழப்பீர்கள். கூட்டுத்தொழில் லாபகரமாக நடைபெறும். பணியாளர்களின் கோரிக்கைகள் தீர்க்க முடியாததாக இருக்கலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். சிறு கடன் தொல்லைகளை பெண்களே தங்கள் சேமிப்பைக் கொண்டு சரிசெய்து விடுவார்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்றாலும், எதிர்பார்க்கும் வருமானம் இருக்காது.

சிறப்புப் பரிகாரம்- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்