விருச்சகம் - வார பலன்கள்

Update:2023-09-01 01:12 IST

நீதியும், நேர்மையும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

செய்யும் காரியங்களில் தடை தாமதங்கள் குறுக்கே வந்தாலும் அவைகளை முறியடித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலைப் பளுவினால் தொல்லைப்பட நேரலாம். அவசியமான வேலை ஒன்றை அவசரமாகச் செய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். பணிகளில் கவனமாக இல்லாவிட்டால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சொந்தத் தொழிலில் முக்கிய பணியை நிறைவேற்ற அலைச்சலை சந்திப்பீர்கள். வரவேண்டிய ஆதாயம் தள்ளிப் போகலாம். எதிர்பாராத செலவுகள் உண்டு. கூட்டுத்தொழில் வியாபாரத்தில் போட்டிகளால் தொய்வு ஏற்படக்கூடும். ஆனால் வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகளை தீர்க்க முயற்சிப்பீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற தீவிர முயற்சிகளை மேற்கொள்ள நேரலாம்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்