விருச்சகம் - வார பலன்கள்

Update:2023-10-06 01:02 IST

6.10.2023 முதல் 12.10.2023 வரை

காரியங்களை துணிந்து செய்யும் விருச்சிக ராசி அன்பர்களே!

பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். வர வேண்டிய தொகை வசூலாகும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சந்திராஷ்டமம் உள்ளதால், தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு சம்பள உயர்வும், இடமாற்றமும் ஏற்படலாம். சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும். புதியவர்களிடம் அலுவலக விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது.

சொந்தத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் நல்ல திருப்பங்களைச் சந்திக்கலாம். வாடிக்கையாளர்களின் நிலுவைகளை வசூலிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் கூட்டாளியின் ஆலோசனை பயன் தரும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், அமைதி காணப்படும். கடனை சமாளிப்பீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் கவனம் செலுத்துவீர்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை புத பகவானுக்கு பச்சை பயறு சுண்டல் நைவேத்தியம் செய்யுங்கள்.

மேலும் செய்திகள்