கம்பீரமான தோற்றம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
வடதிசையில் இருந்து நல்ல தகவல் வரக்கூடும். எடுத்த காரியங்களில் வெற்றியும், எதிர்பார்க்கும் பணவரவுகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றில் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் அவசரம் காரணமாக ஓய்வின்றி பணியாற்றுவார்கள். செய்யும் வேலைக்குத் தகுந்த வருமானம் கிடைத்து, பொருளாதாரம் உயரும்.
கூட்டுத் தொழில் வியாபாரம் லாபகரமாக நடைபெறும். மூலப்பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பணப்பொறுப்பில் உள்ளவர்களால் பிரச்சினை வரலாம். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை, பெண்களே சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். கலைஞர்கள் புதிய பணிகளில் மகிழ்வுடன் ஈடுபடுவார்கள். பங்குச்சந்தை லாபம் ஈட்டும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டுங்கள்.