29.9.2023 முதல் 5.10.2023 வரை
சிந்தனை தெளிவு கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
வியாழக்கிழமை காலை 11.55 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் கவனம் தேவை. மற்றபடி உங்கள் செயல்கள் பலவற்றில் முன்னேற்றமான பலன்களைக் காணலாம். நண்பர்கள் தகுந்த சமயத்தில் உதவியாக இருப்பார்கள். எதிர்பார்த்த பணம் வந்து மகிழ்வளிக்கும். பெரும்பாலான காரியங்கள் அதிக முயற்சி இன்றி நடைபெறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஆதரவுடன், பல நன்மைகளைப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், நவீன கருவிகளின் உதவியால், வேலைகளை விரைவாகச் செய்து கொடுத்து வாடிக்கையாளர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். குடும்பம் சீராக நடைபெறும். பெண்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களால் மகிழ்வர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு வில்வ மாலை சூட்டி வழிபடுங்கள்.