காரியத்தில் கருத்தாக இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
வெள்ளி முதல் ஞாயிறு பகல் 2.08 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. உங்கள் சொந்த முயற்சியால் திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டவாறே செய்து முடிப்பீர்கள். பண வரவுகளில் இருந்த இன்னல்கள் அகலும். எதிர்பார்க்கும் தொகை கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில், சக ஊழியர்களுடன் எதிர்பாராத மனக்கசப்பு உருவாகலாம். உயரதிகாரிகளின் விருப்பப்படி அவசியமான காரியம் ஒன்றை உடனடியாக செய்ய நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படலாம். கூட்டுத் தொழிலில் வியாபாரம் சுமாராக நடந்தாலும், லாபம் குறையாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து போகும். பங்குச்சந்தையில் நண்பர்களின் கவனக்குறைவால் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் போகலாம்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துா்க்கைக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபடுங்கள்.