தீவிரமாக செயல்புரிந்து பாராட்டுப் பெறும் விருச்சிக ராசி அன்பர்களே!
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நண்பர்கள் மூலம் எண்ணக் கனவுகளை நனவாக்கிக் கொள்வீர்கள். தொழில் ரீதியான அலைச்சல் இருந்தாலும், ஆதாயம் இருக்கும். தொழிலில் போட்டிகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நண்பர்கள், உறவினர்களிடம் தடிப்பான வார்த்தைகளைப் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரிகளின் ஆதரவோடு சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். அலுவலகம் பற்றி விமர்சிப்பது தொல்லைகளை தரலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள நேரலாம். கூடுதல் லாபம் பெற அதிகமான உழைப்பு தேவைப்படும். குடும்பத்தில் நன்மையும், தொல்லையும் கலந்து காணப்படும். கலைத்துறையினர் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருவாய் ஈட்டுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டி, நெய் தீபமிடுங்கள்.