விருச்சகம் - வார பலன்கள்

Update: 2023-06-08 19:55 GMT

சிந்தித்து முடிவெடுக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

நினைத்த காரியங்களை எளிதில் முடித்து எதிர்பார்க்கும் ஆதாயங்களைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக எண்ணியிருந்த செயல் ஒன்றினை முடிக்கக் காலம் கனிந்து வரும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுடன் இடமாற்றம் தேடி வரும். இதுவரையில் கைக்கு வராமல் இருந்த தொகை கிடைத்து, நின்று போயிருந்த பணிகளைத் தொடர்வீர்கள்.

சொந்தத் தொழிலில் புதிய முறைகளைப் புகுத்த முயற்சிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் கூடுதலான ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தை விஸ்தரிக்கும் முயற்சியில் கொஞ்சம் யோசித்து நடப்பது நன்மை தரும். குடும்பத்தில் மனதுக்குப் பிடித்தமான சம்பவங்கள் நடை பெறும். பெண்களுக்கு மங்கலகரமான பொருட்கள் வீடு தேடிவரும். கலைஞர்கள் களிப்படையும்படி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்