விருச்சகம் - வார பலன்கள்

Update:2023-06-02 01:19 IST

புதுமையான காரியங்களைச் செய்யும் விருச்சிக ராசி அன்பர்களே!

செய்யும் காரியங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படும்போது அதை ஒதுக்கி விடுங்கள். தொல்லைகளை விலக்கினால் விரயங்கள் சுபமாக மாறும். ஒரு சிலருக்கு தாங்கள் குடியிருக்கும் வீட்டை இடித்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். ஒரு சிலர் வடதிசை யாத்திரை மேற்கொள்வார்கள். இன்னும் சிலருக்கு மகான்களின் ஆசியால் மன அமைதி கிடைக்கும். அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கு சிறுசிறு தொல்லைகள் ஏற்படும். குடும்பத்தில் மூத்த சகோதரர்களால் மனக்கசப்பு தோன்றி மறையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் சுப காரிய தடை உள்ளவர்கள், அந்தந்த தடைகள் நீங்கி மகிழ்வார்கள். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் வாரம் இது. நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் சிலருக்கு வசூலாகும். எதிரிகள் விலகுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குரிய மந்திரத்தை பாராயணம் செய்து வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்