விருச்சகம் - வார பலன்கள்

Update:2023-05-26 01:38 IST

மிகச்சிறந்த சிந்தனை வளம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

செய்யும் செயல்கள் சிலவற்றில் சிறப்பான வெற்றி கிடைக்கும். சில செயல்களில் அதிக முயற்சிகள் தேவைப்படலாம். பணவரவுகள் சிறிது தாமதித்தாலும் குறையின்றி கைகளுக் குக் கிடைக்கும். சொந்த பந்தங்களுக்குள் ஏற்படும் சிக்கலைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் அதிகமாகும்.

சொந்தத் தொழில் புரிபவர்கள் புதிய வாடிக்கையாளர் பணியைச் செய்து முடிக்க விரைந்து செயல்படுவர். பணவரவுகள் வேலைக்குத் தக்கபடி இருக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் அதிக லாபம் பெறுவர். குடும்பத்தில் சிறு சிறு கடன் தொல்லைகள் ஏற்படலாம். அவற்றை திறமையாகச் சமாளிப்பீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் பெற்றாலும், எதிர்பார்க்கும் வருமானம் இல்லாமல் போகலாம்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை சூட்டி நெய் தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்