ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகரமான பலன்களைப் பெறுவீர்கள். முன்னேற்றமான காரியங்களை செய்து திருப்திகரமான பலன்களை அடைவீர்கள். திட்டமிட்டபடி பணவரவுகள் வந்துசேரும். உத்தியோகஸ்தர்கள், அவசியமான வேலையை, உயரதி காரிகளின் விருப்பப்படி செய்து கொடுத்துப் பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பணம் கைகளுக்கு வந்துசேரும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்கள் மூலம் வேலைகள் வந்துசேரும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்வான போக்கு காணப்படும். எதிர்பாராத பணவரவுகள் மகிழ்வளிக்கும். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தங்களின் மூலம், வாய்ப்புகளும், வசதிகளும் அடைவார்கள். சகக்கலைஞர்களுக்கு உதவுவீர்கள். பங்குச்சந்தை லாபம் தரும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.