விருச்சகம் - வார பலன்கள்

Update:2023-04-28 02:07 IST

சிந்தனை வளமும், செயல் திறனும் நிறைந்த விருச்சிக ராசி அன்பர்களே!

ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். முயற்சிகள் மூலம் முன்னேற்றமான காரியங்கள் நடைபெறும். கொடுக்கல் - வாங்கலில் கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் ஆதரவுடன் சில சலுகைகளை அனுபவிப்பீர்கள். பொறுப்புகள் அதிகமானாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபரின் அறிமுகமும், அவரால் தொழில் ரீதியான முன்னேற்றமும் ஏற்படும். பணிகளில் புதிய உத்தியைக் கையாளுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் முன்னேற்றமாக நடைபெறும். குடும்பம் சிறப்பாக நடைபெறும். மங்கல நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்பார்கள். கலைஞர்கள் பணிகளில் உற்சாகமாகச் செயல்படுவார்கள். பங்குச்சந்தை லாபம் ஈட்டித் தரும்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்