சிந்தனை வளம் நிறைந்த விருச்சிக ராசி அன்பர்களே!
திங்கட்கிழமை பகல் 2.47 மணி முதல் புதன்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். சற்று அலைச்சல் இருக்கும் என்றாலும், புதிய முயற்சிகள் பலவற்றில் வெற்றி வந்து சேரும். கவலைகள் தீர்ந்து கலகலப்பு அதிகரிக்கும். எதிர்கால நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு காரணமாக பல சலுகைகளைப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயரும். இரவு-பகல் பாராமல் பணியாற்றுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். பெண்கள் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்துவீர்கள். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தங்களைப் பெறுவர். பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைக்கும்.
பரிகாரம்:-இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு, துளசி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.