சலிப்பில்லாமல் பணியாற்றும் குணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
செய்யும் பணிகளை தொடர்ந்து முயற்சியுடன் செய்தாலும், சில காரியங்கள் மட்டுமே திருப்தி தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் வேலைகளில் அதிக கவனமுடன் செயலாற்ற வேண்டும். முக்கியமான வேலை ஒன்றை விரைவாகச் செய்து முடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிக கவனத்துடன் வேலைகளைச் செய்தாலும், வாடிக்கையாளர்களுக்குத் தகுந்த காலத்தில் தரமுடியாமல் போகலாம். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகள் இருந்தாலும், பெண்கள் அதை சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் பெற சகக்கலைஞர்கள் மூலம் முயற்சி மேற்கொள்வார்கள். பங்குச்சந்தையில் அதிக லாபம் பெற ஸ்திரமான பங்குகளை வாங்குங்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு, கருநீல மலர் சூட்டி, நல்லெண்ணெய் தீபமிடுங்கள்.