சிறப்பு செயல்திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
பல காரியங்களில் வெற்றியான பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், விடுமுறையில் உள்ள சகப் பணியாளர்களின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில சலுகைகளையும் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்களின் பணிகளை அதிக முயற்சியுடன் செய்து கொடுப்பார்கள். பழைய வாடிக்கையாளரின் உதவியால் தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வழக்கமான லாபம் கிடைக்கப்பெறும். பங்குதாரர்களுடன் வியாபார அபிவிருத்தி பற்றி விவாதித்து முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அதே நேரம் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படவும் வாய்ப்புண்டு; கவனமாக இருப்பது அவசியம். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை, நரசிம்ம பெருமாளுக்கு மலர் மாலை சூட்டி அர்ச்சனை செய்யுங்கள்.