தருமச் செயல்களில் விருப்பம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் முயற்சிகள் ஓரளவு கைகொடுக்கும். நீண்ட கால பகைமை குறைந்து, உறவு முறைகளில் சீரான தன்மை நிலவும்.
சொந்தத் தொழில் புரிபவர்களுக்கு, தொழில் செய்யும் இடத்தை மாற்றவோ, தொழிலை மாற்றவோ எண்ணம் தோன்றும். இருப்பினும் கூடுமானவரை, புதிய மாற்றங்களை சில நாட்கள் தள்ளிவைப்பது நல்லது. பழைய கடன் தொல்லைகள் மீண்டும் தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. கம்ப்யூட்டர் சம்பந்தமான கல்வி பயிலும் மாணவர்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குடும்ப சுகம் மற்றும் பயணத்தில் தடங்கல் வரலாம். கல்வித்துறை மற்றும் நீதித்துறையில் பணிபுரியும் பெண்கள், அதிக முயற்சியால் பதவி உயர்வை அடைவார்கள். சொந்தத் தொழில் செய்ய நினைப்பவர்கள், நிதானித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கடன் சுமை குறையும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் காரியம் வெற்றியாகும்.