விருச்சகம் - வார பலன்கள்

Update: 2023-03-09 20:07 GMT

உழைப்பை ஆதாரமாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத தனவரவு வந்து சேரும். பிள்ளைகள் வழியில் ஒரு சிலருக்கு கவலை உண்டாகும். மனைவி யின் உறவினர் வகையில் சிலருக்கு மனஸ்தாபம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள், நீங்கள் விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றை எளிதாக பெற்று மகிழ்வீர்கள். சக ஊழியர்களுடனான பிரச்சினைகள் சுமுகமாக தீரும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் பெறுவார்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். கூட்டாளிகள் அனைவரும் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் தலைதூக்கினாலும், அவற்றை சாமர்த்தியமாக சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவி இடையே பரஸ்பர அன்பு நிலவி வரும். சிலருக்கு திருமணம் கைகூடும்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.

மேலும் செய்திகள்