கட்டளையிடும் பணிகளில் விருப்பம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
புதன் மற்றும் வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், மனதில் கலக்கம் உண்டாகலாம். வழக்கமான பொறுமையை கடைப்பிடிப்பது நன்மை தரும். பணிகளை நிதானமாக செய்வது காரியத்தை சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, தற்போதைய பணியில் மாற்றம் வரலாம். சகப் பணியாளர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிப்பதால், ஓய்வு நேரம் குறையும். வேலைக்கேற்ற வருவாய் இருக்குமா? என்பதும் சந்தேகம்தான். கூட்டுத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கலாம். பணியாளர்களின் வேலையில் திருப்தி ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை வளரும். பெண்களின் வருமானம் உயரும். கலைஞர்கள், புதிய பணிகளால் மகிழ்ச்சியடைவர். பங்குச்சந்தை வியாபாரம் பரபரப்பாக நடைபெறும்.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை அன்று அங்காரக பகவானுக்கு, நெய் தீபமேற்றி வழிபாடு செய்யுங்கள்.