கவலையை தனக்குள் வைத்திருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் நிதானம் தேவை. உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, அலுவலகத்திலேயே பதவி உயர்வு ஏற்படலாம். உங்கள் சொல்லுக்கு நல்ல மதிப்பு உண்டாகும். சக நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
சொந்தத்தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளரின் அவசரம் கருதி, வேலை ஒன்றை விரைவாக செய்து கொடுப்பீர்கள். கூட்டுத்தொழிலில், பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது பற்றி கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள்.
கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்றாலும், பழைய ஒப்பந்தங்களில் இருந்தும் வருமானம் பெறுவர். பங்குச்சந்தையில் லாபம் பெற, அன்றாட நிலவரங்களை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் தோன்றும் சிறு சிறு பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டு.
வழிபாடு:- வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு, நெய் தீபம் ஏற்றி வணங்கினால் பொன், பொருள் சேரும்.