விருச்சகம் - வார பலன்கள்

Update: 2023-01-19 19:58 GMT

சிந்தனை வளம் மிகுந்த விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த வாரம் சங்கடமான சூழல்கள் உருவாகலாம். இருப்பினும் அவற்றை சரியான முறையில் சமாளிப்பீர்கள். சிலரால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படலாம். உங்களால் பயனடைந்த சிலருக்கு, மீண்டும் உதவி செய்வீர்கள். ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று வரும். இருப்பினும், தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தை சில காலத்துக்குத் தள்ளிப்போடுவது நல்லது. அசையாச் சொத்துக்களை அடமானம் வைத்தோ அல்லது விற்றோ பணம் புரட்ட இப்போது முயற்சிக்க வேண்டாம்.

பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட்டால் முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் செய்திகள்