விருச்சகம் - வார பலன்கள்

Update:2023-01-06 01:45 IST

செயல்களில் அதிக முயற்சி கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதில் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடியுங்கள். வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 8.49 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல் - வாங்கலில் குளறுபடி ஏற்படலாம். சொன்னபடி நடந்துகொள்வது சிரமமாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகள் தொடர்பாக எவ்வித நன்மைகளையும் எதிர்பார்க்க இயலாது. தொழில் துறையில், வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பது அரிது. மூலப்பொருட்களை சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.

கலைஞர்களுக்கு, புதிய வாய்ப்புகள் கிடைக்க காலதாமதம் ஆகலாம். எனவே பழைய ஒப்பந்தங்களிலேயே வருமானம் ஈட்டப் பாருங்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பழைய பகை மறையும். நீதிமன்ற வழங்குகள் உங்களுக்கு சாதமாக அமையலாம்.

பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, நவக்கிரக சன்னிதியை வலம்வந்து நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

மேலும் செய்திகள்