விருச்சகம் - வார பலன்கள்

Update:2022-12-30 01:57 IST

30.12.2022 முதல் 5.1.2023 வரை

கலைகளில் ஆர்வம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

பண வரவுகளைப் பெறும் வாரம் இது. வியாழக்கிழமை காலை 9.33 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகளும் இருக்கலாம். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு, அலுவலகத்திலேயே சம்பள உயர்வுடன் கிடைக்கக் கூடும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர் வருகையால் பண வசதி அதிகரித்தாலும், வேலையை ஓய்வின்றி செய்ய வேண்டியதிருக்கும். கூட்டுத் தொழில் வியாபாரம் சுமாராக நடந்தாலும், லாபம் குறையாது.

குடும்பம் சீராக நடந்து வந்தாலும், அவ்வப்போது சிறு சிறு தொல்லைகளும் ஏற்படத்தான் செய்யும். இல்லத்தில் திட்டமிட்டபடி சுபகாரியங்கள் நடைபெறும். கலைஞர்களில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். பங்குசந்தை வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.

பரிகாரம்:- வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்