கவலைகளை வெளிக்காட்டாத விருச்சிக ராசி அன்பர்களே!
நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் நல்லபடியாக நிறை வேறும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைப் பெற முயற்சி செய்தால், அதில் வெற்றி கிடைக்கக்கூடும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதுதான் வளர்ச்சிக்கு நல்லது.
தொழில் செய்பவர்கள், வேலைப்பளு காரணமாக கொஞ்சம் சோர்வடையக்கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, திருப்தி ஏற்படக்கூடிய வகையிலேயே வியாபாரம் நடைபெறும்.
கலைஞர்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் பேரில் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசியல் துறையினர் நிதானமாக செயல்படுவது அவசியம். பாகப்பிரிவினையில் பெண்களுக்கும் சிறு தொகை கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். ஆடை- ஆபரண சேர்க்கை உண்டு.
பரிகாரம்:- சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் இன்னல்கள் மறையும்.