விருச்சகம் - வார பலன்கள்

Update:2022-12-16 01:26 IST

எச்சரிக்கை உணர்வோடு செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!

செய்யும் காரியங்களில் சிறு சிறு தொல்லைகள் ஏற்படலாம். அவற்றை உங்கள் திறமையால் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிகளில் கவனமாக இருந்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு அலுவலகக் கடன் கிடைக்கும். சொந்தத்தொழில் சிறப்பாக நடைபெறும். பணவரவு கூடும். அவசரமான பணி ஒன்றை முடிக்க தீவிரமாக செயலாற்றுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகளில் மகிழ்வாக ஈடுபடுவீர்கள். சகக்கலைஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பம் சீராக நடைபெற்றாலும், சிறிய குழப்பங்களும் வந்துபோகும். பிள்ளைகளின் மேற்படிப்புக்காக செலவிடுவீர்கள். கடிதம் மூலம் முக்கிய தகவல் வரும். பெண்களுக்கு நெருங்கிய சொந்தங்களினால், சிறு மனக்கசப்பு ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்:- ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் துன்பங்கள் அகலும்.

மேலும் செய்திகள்