விருச்சகம் - வார பலன்கள்

Update:2022-11-25 01:22 IST

தைரியமான மனம் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே!

சிறிது தொல்லைகளும், சிறிது நன்மைகளுமாக கலந்து நடைபெறும் வாரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள், இதுநாள் வரை தடைப்பட்டு வந்த பதவி உயர்வை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட மனக் குழப்பமும், சிறு சச்சரவுகளும் விலகும்.

தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெறும் வகையில் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் போதுமான லாபத்தைத் தருமா? என்பது சந்தேகம்தான். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களில் இருந்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். தொழில் போட்டியை சமாளிப்பீர்கள்.

குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை, பெண்களே சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்:- வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் நன்மைகள் வந்து சேரும்.

மேலும் செய்திகள்