உற்சாகத்துடன் உழைக்கக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே!
நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி தேடி வரும். சினிமாத் துறையில் உள்ளவர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் வெற்றியைத் தருவதாக அமையும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். பணப்புழக்கம் தாராளமாகக் காணப்படும். இருந்தாலும் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். வீடுகளை புதுப்பிக்க வேண்டி வரலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்கு எதிர்பாராத தனவரவு, பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்தபடி நகை வாங்கவோ, நிலம் வாங்கவோ வாய்ப்பு உண்டாகலாம். இதற்கு முன் முடங்கிக் கிடந்த சீட்டுப் பணமோ, தங்களது வைப்பு நிதியோ திரும்பக் கிடைக்கும். பெரியோர்களது ஆசி உங்களைத் தேடி வரும். ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் கிடைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டினால் நன்மைகள் அனைத்தும் வந்துசேரும்.