விருச்சகம் - வார பலன்கள்

Update:2022-11-11 01:25 IST

சிந்தனைச் சிறப்புடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணி முதல் திங்கட்கிழமை காலை 6.20 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கூடுமானவரை பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆணைப்படி, அவசர வேலையை ஓய்வின்றி செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

சொந்தத் தொழில் நன்றாக நடைபெறும். வாடிக்கையாளர் வருகையால் வளர்ச்சி கூடும். கூட்டுத்தொழிலில் அதிக லாபம் இருக்காது. பணியாளர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

குடும்பம் சீராக நடந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் தோன்றி மறையும். கலைஞர்கள் பணியில் திருப்பமும், புகழும் கிடைக்கலாம். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபமும், நண்பர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் வினைகள் அகலும்.

மேலும் செய்திகள்