விருச்சகம் - வார பலன்கள்

Update:2022-11-04 01:25 IST

கனிவாக பேசும் குணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களுக்கு வரவேண்டிய தொகை, நினைத்தபடி குறித்த நேரத்தில் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் ஒரு சிலருக்கு செல்வாக்கு உயரும். சொந்தத்தொழில் செய்பவர்கள், வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. உதவியாளர்களில் தொழில்நுட்பம் அறிந்தவர்களை பணியில் அமர்த்திக்கொள்ள திட்டமிடுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பணியாளர்களை அவ்வப்போது கண்காணித்து வருவது நல்லது. பங்குச்சந்தை நன்றாக நடைபெறும். கலைத் துறையினர், புதிய ஒப்பந்தங்களினால் புகழும் பொருளும் பெறக்கூடும். சகக்கலைஞர்களின் ஒத்துழைப்புடன் தொழிலில் நல்ல பெயர்பெற முற்படுவீர்கள். குடும்பத்தில் சீரான போக்கு இருக்கும். பெண்கள் தாய்வழி உறவு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

பரிகாரம்:- தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

மேலும் செய்திகள்