விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை
தொழிலில் மேன்மை காணும் விருச்சிக ராசி அன்பர்களே!
உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகமாகலாம். நண்பரின் விடுமுறையால் அவரது பணியையும் சேர்த்துச் செய்யும் நிலை உருவாகலாம். சொந்தத்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வேலைப்பளு அதிகரித்தாலும், அதற்கேற்ப வருமானமும் வந்துசேரும். கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. புதிய கிளை தொடங்குவது பற்றி ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தையில் லாபம் சுமாராக இருக்கலாம். கலைஞர்கள் புதிய வாய்ப்புப் பெற, சக நண்பர் மூலம் முயற்சிகளை மேற்கொள்வர். பழைய ஒப்பந்தங்களிலேயே புதிய வேலை மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் சாமர்த்தியமாகச் சமாளிக்கப்படும். பெண்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி கிடைக்கும்.
பரிகாரம்:- சனி பகவானுக்கு சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் வந்த வினைகள் பறந்தோடும்.